பட்டைய கிளப்பப்போகும் தோனி – CSK நிர்வாகம் வெளியிட்ட மாஸ் அப்டேட்., சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

0
பட்டைய கிளப்பப்போகும் தோனி - CSK நிர்வாகம் வெளியிட்ட மாஸ் அப்டேட்., சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
பட்டைய கிளப்பப்போகும் தோனி - CSK நிர்வாகம் வெளியிட்ட மாஸ் அப்டேட்., சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவது கேள்விக்குறியாக இருந்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் தோனி பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் தத்தளித்து வருகின்றனர்.

சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

ஐபிஎல் தொடர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சென்னை அணி தான். ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த அணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி சிறப்பாக விளையாடி நான்கு முறை ஐபிஎல் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் இந்த அணி மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் அணியில் நிலவிய சண்டை, குழப்பம் காரணமாக பிளே ஆப் சுற்று கூட நுழைய முடியாமல் தகுதிச் சுற்றிலே சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் CSK அணிக்கு ஏற்பட்ட பிரச்சனை, கேப்டன்சியில் ஏற்பட்ட மாற்றம் போன்றவை குறித்து பல சர்ச்சைகள் வெளிவந்தது. தற்போது வரை இந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் திணறி வருகிறது. இந்நிலையில் தோனி குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டது. அதாவது ஐசிசி யின் மூன்று பட்டங்களை வென்றவரான தோனி சர்வதேச தொடர்களில் இருந்து கடந்த ஆண்டு தான் ஓய்வு பெற்றார். சர்வதேச தொடர்களில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து உள்ளூர் தொடர்களான ஐபிஎல் இல் மட்டும் விளையாடி வந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு சீசனில் கேப்டனாக இருந்து விளையாடிய தோனி அடுத்த ஆண்டு விளையாட வாய்ப்பில்லை என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக தோனி அடுத்த சீசனில் களமிறங்குவார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை கேட்ட சிஎஸ்கே ஃபேன்ஸ் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மீண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டனாக வர உள்ளதால் அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here