CSK வின் தல தோனி மருத்துவமனையில் அனுமதி?? வெளியான பகீர் தகவல்!!

0
CSK வின் தல தோனி மருத்துவமனையில் அனுமதி?? வெளியான பகீர் தகவல்!!
CSK வின் தல தோனி மருத்துவமனையில் அனுமதி?? வெளியான பகீர் தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 வது சீசனை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று வரலாறு படைத்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்-லில் CSK அணிக்காக தனது சிறந்த பங்களிப்பை அளித்துள்ள தோனி 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர், நடந்து முடிந்த இந்த ஐபிஎல் 16 வது சீசனுடன் ஓய்வு குறித்து அறிவிப்பார் என பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இதற்கு தோனி உடல் ஒத்துழைத்தால் அடுத்த சீசனிலும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விளையாடுவேன் என்று கூறினார். மேலும், நான் விளையாடவில்லை என்றாலும் CSK அணியுடன் தான் இணைந்திருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

பழுத்த பப்பாளி பழ மேனி., அதை பக்குவமாய் காட்டி இளசுகளை உசுப்பேற்றும் கிரண்!!

தோனி, இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் இடது முழங்கால் காயத்துடன் தான் விளையாடினார். இந்த காயத்தினால், ரன்கள் ஓட சிரமப்பட இவர், சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசவே அதிகபட்சம் முற்பட்டார். அடுத்த சீசனில் பங்குபெற விரும்பும் இவர், இடைப்பட்ட காலத்தில் முழங்கால் காயத்திற்கு தகுந்த சிகிச்சை பெற்று உடல் தகுதியை தக்கவைத்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக, தோனி அடுத்த வாரம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here