ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளியுடன் CSK யின் தல தோனி…, வைரலாகும் உணர்வுப்பூர்வ வீடியோ உள்ளே!!

0
ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளியுடன் CSK யின் தல தோனி..., வைரலாகும் உணர்வுப்பூர்வ வீடியோ உள்ளே!!
ஆஸ்கர் நாயகர்களான பொம்மன், பெள்ளியுடன் CSK யின் தல தோனி..., வைரலாகும் உணர்வுப்பூர்வ வீடியோ உள்ளே!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக இன்று சேப்பாக்கம் மைதானத்தில் தனது 12 வது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகி வரும் சென்னை அணி, நேற்று மைதானத்தில் உரிமையாளர் ரூபா குருநாத், தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிகழ்ச்சியில் CSK நிர்வாகம், அம்மு மற்றும் ரகு ஆகிய இரண்டு யானைகளின் வாழ்க்கையை அழகாக ஆவணப்படமாகி ஆஸ்கர் விருது வென்ற பட குழுவினரை அழைத்து பெருமைப்படுத்தினார். அதாவது, “தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்” படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், ரியல் ஹீரோக்களான பொம்மன், பெள்ளி ஆகியோரை, CSk அணி நிர்வாகம் பாராட்டியதுடன் நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்து உள்ளது.

RCBயின் கனவு நினைவாகும் தருணம் வருமா?? பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வழி தான் என்ன??

மேலும், CSK தல தோனியையும் சந்தித்தது, அணியின் ஜெர்சியையும் நினைவுப் பரிசாக அவர்கள் பெற்றுள்ளனர். தோனியை சந்தித்த இந்த ஆஸ்கர் நாயகர்களின் புகைப்படம் மற்றும் வீடியோவை CSK இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here