இந்தியாவில் ஆரம்பமாக இருக்கும் க்ரிப்டோ பரிவர்த்தனைகள்!!!

0

பிட் காயின் மாதிரியான க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்குவதற்கு பிற நாட்டுக்காரர்களை போலவே இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், தற்போது க்ரிப்டோ பரிவர்த்தனை மையங்கள் இந்தியாவில் ஆரம்பமாக உள்ளது.

க்ரிப்டோ பரிவர்த்தனைகள்:

உலகம் முழுவதும் டிஜிட்டலில் பொதுவான பண பரிமாற்றம்தான் செய்யும் முறைதான் கிரிஸ்டல் கரன்சி. இதற்குப் பயன்படுத்தப்படும் பிட் காயினை வாலட்டில் சேர்த்து வைத்து உலகளாவிய பரிவர்த்தனையை செய்து கொள்ளலாம். 2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிட்காயின் எந்த ஒரு நிறுவனத்தையோ, அரசையோ சாராமல் ப்ளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் சுயமாக இயங்கக் கூடியது.

உலகம் முழுவதும் பிட்காயின்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதில் ஐந்து மில்லியன் இந்தியர்கள் 1,000 கோடிக்கும் அதிகமாக இந்த க்ரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக வசீர்எக்ஸ் என்ற க்ரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிக்கல் ஷெட்டி  தெரிவித்திருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் செயல்படும் வங்கிகள் கிரிப்டோ கரன்சிகளோடு வணிகம் மேற்கொள்ளக்கூடாது என ஆர்பிஐ தடை விதித்து. இந்த தடையை 2020ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. தற்போது இந்த க்ரிப்டோ கரன்ஸி உலகளவில் வெகு பிரபலம் அடைந்துவிட்டதால் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அதே சமயம் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய மசோதாவினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது. இதனை அறிந்த உலகளவிலான பரிவர்த்தனை மையங்கள் இந்தியாவிற்குள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here