கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்., இழப்பீடு வழங்க உத்தரவிட்ட முதல்வர்!

0
கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகள்., இழப்பீடு வழங்க உத்தரவிட்ட முதல்வர்! எவ்ளோ தெரியுமா?

சமீபகாலமாக தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் தென்தமிழக மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த எதிர்பாராத மழையால் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்ததின் பேரில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளை மேற்பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது மழை பதிவு குறைந்து வருவதால் வயலில் உள்ள நீரினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண் பார்வையை காவு வாங்கிய சொட்டு மருந்து., புகழ்பெற்ற மருந்து நிறுவனத்திற்கு தடை! பொதுமக்கள் பீதி!!

இது போக முதலமைச்சரால் அமைக்கப்பட்டுள்ள, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு பயிர் சேதங்களை ஆய்வு செய்து பிப்ரவரி 6ம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த குழுவின் ஆய்வினை பரிசீலனை செய்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகை பயிர் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here