பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் – நிபுணர் குழுவில் பதவி!!

0
பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் - நிபுணர் குழுவில் பதவி!!
பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் - நிபுணர் குழுவில் பதவி!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் என்சிசி அமைப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய பதவி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமாக மகேந்திர சிங் தோனி இருந்து வருகிறார். இவரது திறமையால், இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. கிரிக்கெட் உலகத்தின் “தல” என செல்லமாக அழைக்கப்படும் இவர் இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். இது மட்டுமில்லாமல், தற்சமயம் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் இவர் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் - நிபுணர் குழுவில் பதவி!!
பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் – நிபுணர் குழுவில் பதவி!!

மேலும், இது தவிர வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில், இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இவரின் பெருமைகளை சிறப்பிக்கும் விதமாக, இந்திய இராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் புகழ்பெற்ற பாராசூட் ரெஜிமெண்டில் இராணுவப் பயிற்சியையும் வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, தற்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்று இவருக்கு வழங்கப்பட உள்ளது.

பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் - நிபுணர் குழுவில் பதவி!!
பாதுகாப்பு அமைச்சக குழுவில் MS தோனிக்கு கெளரவம் – நிபுணர் குழுவில் பதவி!!

அதாவது, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் என்சிசி அமைப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் இவருக்கு பதவி வழங்கப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல், இந்த குழுவில் முன்னாள் MP பைஜயந்த் பாண்டா தலைவராகவும், MP வினய் சஹஸ்ரபுத்தே, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் முன்னாள் மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாகவும் செயல்பட உள்ளனர். தோனிக்கு வழங்கப்பட உள்ள இந்த சிறப்பு அங்கீகாரம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here