ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல கிரிக்கெட் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் – வாழ்த்து மழையை பொழியும் ரசிகர்கள்!!

0

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருந்த பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆண் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சி நிறைந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து :

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விளையாட்டு வீரராகவும், ஆல்ரவுண்டராக வும் இருந்தவர் யுவராஜ் சிங். கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் கோப்பையை வென்ற நம் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு தனது விருப்ப ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு  நவம்பர் 30ம் தேதி நடிகை ஹேசல் கீச் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது தங்களது முதல் குழந்தை என்பதால், இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த சிறிய குழந்தை வருகையால் நாங்கள் மகிழ்ந்துள்ளோம் என்றும், அதற்காக வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி என கேப்ஷனில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here