இடித்து அரைத்த “நண்டு கிரேவி” – ட்ரை பண்ணி அசத்துங்க!!

0

கனிம சத்துக்கள் அதிகமாக இருப்பது நண்டில் தான். இந்த சத்துக்களின் மூலமாக உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து விடும். இதனால் இன்று சற்று வித்தியாசமாக “நண்டு கிரேவி” ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • நண்டு – 500 கிராம்
  • சின்ன வெங்காயம் – 5
  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • நல்எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 2
  • இஞ்சி & பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை – தேவையான அளவு

செய்முறை

முதலில், மிஸ்சியில் சின்ன வெங்காயம், சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதில் தக்காளி, இஞ்சி & பூண்டு விழுது சேர்க்க வேண்டும்.

பாரதி கண்ணம்மாவில் இணையும் ரக்சன்?? வைரலாகும் புகைப்படம்!!

பின், இந்த கலவையில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிண்டி விட வேண்டும். பின், இதில் நாம் அரைத்து வைத்துள்ள கலவையையும் சேர்த்து கிண்டி விட வேண்டும். பச்சை வாசனை போகும் வரை கிண்டி விட்டு பின், அதில் எடுத்து வைத்துள்ள நண்டினை சேர்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சிறிதளவு தண்ணீர் சேர்த்து இந்த கலவையினை மூடி வைத்து விட வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து இதில் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

இடித்து அரைத்த “நண்டு கிரேவி” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here