கோவின் இணையதளத்தில் தமிழ் – கொண்டாடும் தமிழர்கள்

0

கோவின் இணையத்தில் மொழிகள் என்னும் அமைப்பில் பல்வேறு மொழிகள் இருந்துவந்த நிலையில் தமிழ் மொழியை சேர்க்க கோரி கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்:

நாடு முழுவது கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவி வரும் வேளையில் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு முயற்சிகளினால் தற்போது கொரோனா தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது.ஜனவரி 16-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்வதற்கும், தடுப்பூசி போடப்பட்டுள்ள விவரங்களை அறிந்துகொள்வதற்கும் மத்திய அரசு சார்பில் கோவின் (cowin) என்ற இணையதளம் தொடங்கப்பட்டது. கோவின் இணையம் மற்றும் செயலியில் தொடக்கத்தில் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்பின் மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடா, ஒடியா ஆகிய மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தமிழ் மொழி சேர்க்கபடாதது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர பிற பிராந்திய மொழிகள் நீக்கம் செய்யப்பட்டது. தற்போது கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து 12வது மொழியாக தமிழ் இணைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here