கோவாக்சின் Vs கோவிஷீல்டு… எதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்???

0

இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 518 மருத்துவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் தற்போது வரை மூன்று வகையான  தடுப்பூசிகளை செலுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் கோவிஷீல்டு, கோவேக்சின், மூன்றாவது தடுப்பூசி ரஷ்யாவின் ஸ்புட்னிக் V. அஸ்ட்ராசெனீகாவிடம் உரிமம் பெற்று கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்கிறது சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா. தற்போது இரண்டு தவணைகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசி கோவாக்சினை விட அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவது மருத்துவர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உடலில் 10 மடங்கு அதிக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி உள்ளது தெரியவந்தது. இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட மருத்துவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் உடலில் 6 மடங்கு அதிகமாக நோய் எதிர்ப்பு செல்கள் உருவாகி இருப்பதும் கண்டறியப்பட்டது.

மேலும் மருத்துவ  நிபுணர்கள் நோய் எதிர்ப்பு செல் உற்பத்தியில் கோவிஷீல்டு அதிக திறன் கொண்டு இருந்தாலும் கொரோனா நோய்  தொற்றினை தடுப்பதில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here