இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸால் அமெரிக்காவிற்கு ஆபத்து  – சுகாதார நிபுணர் எச்சரிக்கை!!

0

அமெரிக்க சுகாதார நிபுணர் அந்தோணி ஃபாசி இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸால் அமெரிக்காவிற்கு அதிக எண்ணிக்கையிலான தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் என்னும் தொற்று நோய் கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி அதன் வீரியத்தை பெருக்கிகொண்டது. இந்தியாவிற்கு முதல் அலையில் பாதிப்புகள் இருந்தாலும் அது பிற நாடுகளை ஒப்பிடுகையில் அது குறைவாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் உலகில் மோசமாக பாதித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

 

ஆராய்ச்சியாளர்கள், உருமாறிய  டெல்டா வகை கொரோனா வைரஸால் தான் இரண்டாம் அலையின் போது இந்தியாவில் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தனர். தற்போது இந்த வைரஸ் மேலும் உருமாறி டெல்டா பிளஸ் வைரஸாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சுகாதார நிபுணர் அந்தோணி ஃபாசி டெல்டா வைரஸால் அமேரிக்காவில் மீண்டும் பெருந்தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் அமெரிக்காவில், தற்போது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி இந்த டெல்டா வைரஸை அளிக்கக்கூடிய அளவிற்கு திறன் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here