11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முதியவர் – கோழி அமுக்குவது போல் கொத்தாக தூக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்!!

0

பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 12வது முறையும் தடுப்பூசி போட வந்த போது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார்.

வினோத முதியவர் :

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. அதனால், தான் மக்களை இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரம்ம தேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர்,கடந்த மாதம் பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்து டிசம்பர் 30-ம் தேதி வரை கிட்டத்தட்ட 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.

 

12 வது முறையாக அவர் தடுப்பூசி போட வரும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இது குறித்த பேசிய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர் 8 முறை ஆதார் எண்ணையும், 3 முறை வாக்காளர் அடையாள எண்ணையும் கொடுத்து, தனது மனைவியின் செல்போன் எண்ணை மாற்றி மாற்றி கொடுத்து தடுப்பூசி போட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தனக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக அந்த முதியவர் கூறியது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here