தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் தான் இனி சம்பளம் பெற முடியும் – ஆளுநரின் பரபரப்பு அறிவிப்பு!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் தான் இனி அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்பு:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர்.  தற்போது வரை  கோவாக்சின்,  கோவிஷில்டு  மற்றும் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில், கோவாக்சின் மற்றும் கோவிஷில்ட் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத் தகுந்தது. நாடு முழுவதும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களை அறிவுறுத்தி வருகிறது.


இந்த நிலையில், பல இடங்களில் தொற்று குறைந்துள்ளதால் பல இடங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு, அரசு அலுவலகங்கள் அனைத்தும் முழு பணியாளர்களுடன் இயங்கும் என அரசு அறிவித்தது.  இந்த நிலையில், அரசுப் பணியில் உள்ள அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் என அரசு அறிவித்தது. மேலும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் எனவும் உத்தரவிட்ட பட்டது.

இதில், தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே இனி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார்.  அது போக அரசு சார்ந்த அனைத்து நலத்திட்டங்களையும் பெற தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்  கட்டாயம் எனவும் உத்திரவிட்டார்.  எனவே தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் புதுச்சேரியில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கட்டாயம் தேவை எனும் நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here