குட் நியூஸ்.. நாட்டில் குறையும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை – சுகாதாரத்துறை அறிக்கை

0

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 0.9 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

நோயாளிகள் குறைவு:  

உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று தற்போது சற்று குறைந்துள்ளது.   இதற்கு காரணம் உலகின் பல நாடுகளும் தடுப்பூசி செலுத்தத்தலை அதிகப்படுத்தியதே ஆகும்.  இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,923 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 31,990 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல், நேற்று ஒரு நாள் மட்டும் 282 பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர். இது போக, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை  0.9 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த செய்தி நாட்டு மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here