கொரோனா 3ம் அலை எப்போவே ஸ்டார்ட் ஆயிடுச்சு – மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பகிரங்க பேட்டி!!

0

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், கொரோனா மூன்றாம் அலை துவங்க உள்ளதற்கான  சாத்தியக்கூறுகள் உருவாகியிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 அமைச்சர் பேச்சு :

இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில், பாதிப்பு அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை உருவாகும்  வாய்ப்பு அமைந்துள்ளதாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு நகரில், தற்போது தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாநிலத்தில் பாதிப்பு வீதம் 0.4 சதவீதத்தில் இருந்து, 1.6 சதவீதமாக தற்போது அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் முழு பொது முடக்கம் வருமோ? என பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here