உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக WHO அமைப்பு பொதுமக்களை தடுப்பூசி போட்டும் கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து இந்திய மக்களும் கோவிட் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மாரடைப்பால் திடீர் மரணமடைந்து வருவது அதிகரித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதிலும் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களின் திடீர் மரணம் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதனால் கொரோனா காலத்தில் போடப்பட்ட தடுப்பூசி தான் இதற்கு காரணமா? என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. இதையடுத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுகுறித்து ஆய்வு நடத்தியது. அதன் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இளைஞர்கள் திடீர் மரணம் அடைவதற்கு கொரோனா ஊசி காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் இதெல்லாம் நடக்கும்”., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!!