சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் – சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!

0
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் - சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் - சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!

சமீபத்தில் சீனாவில் பரவிய புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த தனிநபர் தான் காரணம் என்று சீனா அதிரடி குற்றம் சுமத்தியுள்ளது.

புதிய வைரஸ்:

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கோவிட் 19 வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. மேலும், இங்கு பலதரப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இது மட்டுமில்லாமல், லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் சீனா தான் வைரஸ் பரவலுக்கு காரணம் என குற்றம் சுமத்தி உள்ளனர். ஆனால், இதனை மறுத்த சீன அரசு, எங்கள் நாட்டிலிருந்து பரவ ஆரம்பித்ததே தவிர தங்களால் பரப்பப்பட்டது அல்ல என விளக்கமளித்தனர்.

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் - சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் – சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீனாவில் புது வகையான கொரோனா வைரஸ் ஒன்று பரவி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு காரணம், தனிப்பட்ட ஒரு நபர் தான் என சீனா பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளது. அதாவது, இந்த தனிப்பட்ட நபரின் மூலம், சீனாவில் பல மக்கள் புதிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் - சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!
சீனாவில் புதிய கொரோனா வைரஸ் பரவல் – சிங்கப்பூரை சேர்ந்த நபரே காரணம் என சந்தேகம்!!

அதாவது, விமானத்தின் மூலம், சிங்கப்பூரில் இருந்து சீனா வந்த கொரோனா தொற்று பாதித்த நபருக்கு ஒன்பது முறை பரிசோதனை எடுத்தும் கொரோனா நெகட்டிவ் என வந்ததாகவும், இவரால் தான் சீனாவில் புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல், இந்த புதிய வைரஸால் சீனாவில் புதிதாக 70 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here