கொரோனா முன்கள பணியில் பட்டையை கிளப்பும் ரோபோ… விஞ்ஞானிகள் அசத்தலான கண்டுபிடிப்பு!!!

0

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா இரண்டாம் அலை உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதில் முன்களப் பணியாளர்களின் பங்கும் முக்கியமானதாகும். மருத்துவ, சுகாதாரத்துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்க போராடி வருகின்றனர்.

மற்றவர்களை காட்டிலும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் முன்கள பணியாளர்களுக்கு அதிகம். இதை கருத்தில் கொண்டு, ஹாங்காங் விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை கண்டுபிடித்துள்ளன. இந்த ரோபோவுக்கு அவர்கள் கிரேஸ் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.  செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. முதியவர்கள், கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, AI தொழில்நுட்பம் மூலம் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் கண்டறிகிறது. குறிப்பாக,  இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here