இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராக இருக்கும் – WHO நம்பிக்கை!!

0
WHO Director
WHO Director

உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோய் குறித்த உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவின் இரண்டு நாள் கூட்டத்தின் முடிவில் உரையாற்றியபோது WHO இயக்குனர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கொரோனா தடுப்பூசி:

உலகம் முழுவதும் 3 கோடிக்கு மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான தடுப்பூசி இதுவரை கண்டறியப்படாத நிலையில், உலகில் 30க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தின் முடிவில் அதன் இயக்குனர் உரையில், கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு சமமாக விநியோகிப்பதை உறுதி செய்ய அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

corona vaccine
corona vaccine

தற்போதைக்கு 9 தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் ரஷ்யா ஏற்கனவே தடுப்பூசியை கண்டறிந்து உற்பத்தியை தொடக்கி விட்டது. இதில் பக்கவிளைவுகள் இருப்பதாக உலக நாடுகள் கருதுவதால் விநியோகிப்பதில் சிரமம் நிலவுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஸ்போர்டு தடுப்பூசியும் விளைவுகள் காரணமாக மனித பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை- 3 நாளில் அடுத்தடுத்து விபத்து!!

உலக அரங்கில் கொரோனாவிற்கு எதிராக பாதுகாப்பான முதல் தடுப்பூசியை கண்டறியும் நாடே உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலக டாப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், கொரோனா தடுப்பூசியை அனைத்து நாட்டு மக்களுக்கும் சமமான முறையில் விநியோகிக்க அடுத்த ஆண்டு இறுதி வரை ஆகும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here