புதிய மைல் கல்லை தொட்ட இந்தியா – குஷியில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!

0

இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 82 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

முக்கிய சாதனை:

நாட்டில் பரவி உள்ள கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என அரசு வலியுறுத்தி வருகிறது.  இதனால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்துதலை அதிகப்படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசானது அறிவித்து வருகிறது.  இதுவரை மூன்று விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இதில் தற்போது, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பாக இதுவரை இந்தியாவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.  இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில்  68,00,000 அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்தியாவில், 82 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here