தொடருமா ஊரடங்கு ???… வல்லுனர்களின் கருத்து மற்றும் அரசின் முடிவு !!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? மக்கள் நல்வாழ்வுத் துறை அதிரடி!!

தமிழகத்தில் முழு ஊரடங்கானது  தரவுகளற்ற நிலையில் வருகிற 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்னும் பதற்றம் மற்றும் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்து வருகின்றன. மேலும் அரசும் பல்வேறு வல்லுநர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் நிலையில் உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா என்னும் கொல்லுயிரி காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவி வருகின்ற நிலையில் மத்திய மாநில அரசுகளின் சீரிய  முயற்சியால் தற்போது அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற தொற்று அதிகம் இருந்த மாநிலங்களில் 4 முதல் 6 வாரங்கள்  தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. எனவே தமிழகத்திலும் தொற்று பெருமளவு குறையும் வரை இதே நிலை தொடர வேண்டும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய தளர்வுகள் அறிவிக்கும் போது அரசு பின்வரும் விஷயங்களை கருத்தில் கொண்டு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மாவட்டங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் பொது போக்குவரத்து அனுமதிக்க கூடாது. வழிபாட்டு தலங்கள்,வணிக வளாகங்கள்,திரையரங்குகள் போன்றவை செயல்பட தடை தொடர வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே  அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர.

இரண்டாம் அலை பாதிப்பை கட்டுப்படுத்தினால் மட்டுமே  மூன்றாம் அலையை வராமல் தடுக்க முடியும். இல்லையென்றால்  அடுத்த அலையின்  பாதிப்புகள் நினைத்து பார்த்திராத அளவுக்கு இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here