கொரோனா பாதித்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

0

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்கள் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்து முன்னணி தலைவர்:

கொரோனா பாதிப்பால் பல ஈடுசெய்ய இழப்புகளை உலகம் சந்தித்துள்ளது. பல முக்கிய தலைவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவர்கள் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமகோபாலன், பின்னர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மீண்டும் முதல்வர் பதவிக்காக போராடும் ஓபிஎஸ் – நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவிப்பு!!

இந்நிலையில் கடந்த 27ம் தேதி மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 28ம் தேதி தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 94 வயதான அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here