குட் நியூஸ்.. குறையும் கொரோனா பாதிப்பு – நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!!!

0
குட் நியூஸ்.. குறையும் கொரோனா பாதிப்பு - நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!!!
குட் நியூஸ்.. குறையும் கொரோனா பாதிப்பு - நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்!!!
இந்தியாவில் இரு­பது மாநி­லங்­களில் கொரோனா நோய்த்­தொற்­றுப் பர­வல் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. சமீபத்திய தகவல்களின் படி கடந்த ஏழு நாட்களில் சராசரியாக இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் -2.95% குறைந்துள்ளது.
சமீப காலமாக கொரோனா இரண்டாம் அலை உலகமக்களை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளே திரும்பி பார்க்கும் அளவுக்கு கடந்த வாரங்களில் அதிகரித்து வந்தது. இதற்கிடையில் நிபுணர்களும் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரவலும் தொடரும் என எச்சரித்திருந்தனர்.
குறையும் கொரோனா பாதிப்பு
குறையும் கொரோனா பாதிப்பு

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

எனினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, மத்திய மாநில அரசும் பல்வேறு விதமான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இதற்கு முன்பு, நாடு முழு­வ­தும் 187 மாவட்­டங்­களில் கொரோனா தொற்று குறைந்து வரு­வ­தாக புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன என  சுகா­தார அமைச்சகத்தின் இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் சுட்­டிக்­காட்டி உள்­ளார். பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம், 20 மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக வெளியிட்ட புள்ளிவிவரம் மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை துளிர்விட செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here