மசூதிக்குள் சிவலிங்க சிலை கண்டெடுப்பு., இந்துக்கள் பூஜை நடத்த அனுமதி., நீதிமன்றத்தின்  தீர்ப்பால் பரபரப்பு!!!

0
வாரணாசி பகுதியில் அமைந்துள்ள  இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான ஞானவாபி என்ற மசூதி அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த மசூதிக்குள் உடைந்த சிவலிங்க சிலை  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தொல்லியல் துறை இந்த மசூதிக்குள் ஆய்வு செய்திருந்தனர். அதன்படி ஞானவாபி மசூதிக்குள் தெய்வங்களின் உருவங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து 839 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்தது.
இந்த சூழ்நிலையில் இதுகுறித்த நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஞான வாபி மசூதியில் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு செய்து கொள்ள அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. மேலும் பூஜை செய்வதற்கு பூசாரியை நியமனம் செய்ய விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து  மேல்முறையீடு செய்ய மசூதி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here