யானைகள் வளர்ப்பு தொடர்பான புதிய கொள்கை வகுக்க 8 வாரம் கால அவகாசம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!!

0

தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளின் பராமரிப்பு பற்றிய புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

யானைகள் பராமரிப்பு:

தமிழகத்தில் பெரும்பாலும் யானைகள் கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் தனியாரிடமும் சில யானைகள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனியாரிடம் வளரும் யானைகளை துன்புறுத்துகின்றனர் என்ற தகவல் வந்த வண்ணமாக இருந்து வருகிறது. தற்போது இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஒரு உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, மேட்டுப்பாளையத்தில் உள்ள யானைகள் முகாமில் கோவில் யானைகள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும் இதுபோல் யானைகளை துன்புறுத்தும் நபர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

தடுப்பூசி விநியோகத்தில் தனியார் நிறுவனம் – மத்திய அரசு திட்டவட்டம்!!

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்ட கூடாது என்று கூறி, தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகளை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பான புதிய கொள்கையை வகுக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here