வாட்ஸ்ஆப் வீடியோ கால் திருமணம் – போனிற்கு தாலி கட்டிய மாப்பிள்ளை..! வைரலாகும் வீடியோ..!

0

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆங்காங்கே திருமணங்களும் 10 பேருக்கும் குறைவான உறவினர்களுடன், மாஸ்க் அணிந்தபடி நடந்து வருகிறது. அதில் ஒரு படி மேலே சென்று லக்னோவில் உள்ள மணமகளுக்கும், கேரளாவில் உள்ள மணமகனுக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ கால் திருமணம்:

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் வங்கி அதிகாரியாக கேரளாவில் பணிபுரிந்து வருகிறார். அதே மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அஞ்சனா லக்னோவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெற முடிவு செய்ப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அஞ்சனாவால் லக்னோவில் இருந்து கேரளாவிற்கு வர முடியவில்லை. இதனால் குறிப்பிட்ட தேதியில் வாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் திருமணத்தை முடிக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர்.

வைரல் வீடியோ:

திட்டமிட்டபடி லக்னோவில் உள்ள அஞ்சனா மணமகள் கோலத்திலும், கேரளாவில் உள்ள ஸ்ரீஜித் மணமகன் கோலத்திலும் தயாராகினர். இருவரும் மொபைல் போன் முன்பு வாட்ஸ்ஆப் வீடியோ காலில் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டாரும் ஆசி வழங்க, ஸ்ரீஜித் மொபைல் போனிற்கு தாலி கட்டினார்.

அஞ்சனா தனக்கு தானே தாலி கட்டிக்கொள்ள திருமணம் இனிதே நடந்து முடிந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here