இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.. எகிறும் பலி எண்ணிக்கை – மத்திய அரசு பகிர்!

0
இந்தியாவில் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா.. எகிறும் பலி எண்ணிக்கை - மத்திய அரசு பகிர்!

இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் கடந்த சில வாரங்களாக தீவிரம் அடைந்து வருகிறது.தற்போது கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

இந்தியாவில் மட்டுமின்றி கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்திய அரசு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆறு மாதம் ஆனவர்களுக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பூஸ்டர் டோஸை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

18 கோடியை தாண்டியது கொரோனாவின் பாதிப்பு - உலகமே அச்சத்தில் உள்ளது!!!

மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கையின்படி, இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் புதிதாக 56 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் நாட்டில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,37,30,071 ஆக உயர்ந்துள்ளது.அதே போல் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,25,660 ஆக உயர்ந்தது.மேலும் ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,301 ஆக உள்ளது.இதனால் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,30,63,651 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here