29 நாளில் ஒரு கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு – இரண்டாமிடத்தில் இந்தியா!!

0
corono in india
corono in india

கொரோன பாதிக்கப்பட்ட நாடுகளுள் அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா கொரோன பாதிப்பில் இரணடாவது நாடக முன்னிலையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கும் மேலாக பதிப்படைந்துள்ளதை தொடர்ந்து இந்தியா தற்போது இரண்டாவது நிலையில் உள்ளது.

கொரோனா

நாடு முழுவதும் தொடர்ந்து லாக்டவுன் கடைபிடிக்க பட்டு வரும் நிலையிலும் ,வெறும் 29 நாட்களுக்குள் 90 லட்சத்திலிருந்து 1 கோடியாகும் அதிகரித்துள்ளது. இந்த 29 நாட்களில் சராசரி இறப்பு விகிதம் கூட மிக குறைந்த நிலையிலே இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்காவில் 1.7 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளதை அடுத்து அந்நாடு முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த பாதிப்பானது கடந்த வெள்ளியன்று ஒரே நாளில் 27,022 புதிய பாதிப்புகள் மூலம் ஒரு கோடியை தாண்டி தற்போது நாம் இரண்டாவது நிலைக்கு வந்துள்ளோம். பிரேசில் 74 லட்சம் பாதிப்பை கொண்டு 3 வது இடத்தில் உள்ளது.

corona
corona

கடந்த செப்டம்பரில் இந்தியாவில் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. 98, 795 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு வரலாறு படைத்தது. தற்போது பல நடவடிக்கைகளுக்கு பிறகு , இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு இறப்பு விகிதம் 104 என்ற அளவில் குறைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அளவில் ஒப்பிடும் போது தென்னிந்தியாவில் பாதிப்பு குறைவாகவே உள்ளது. கடந்த நவம்பர் 19ல் இந்திய பாதிப்பு 9 கோடியை நெருங்கியபோது தென்னிந்தியாவில் பாதிப்பு வெறும் 37% மட்டுமே இருந்தது. அதன் பிறகான ஒரு கோடி உயர்விலும் 27% மட்டுமே தென்னிந்தியாவின் கணக்காக கருதப்படுகிறது.

குறிப்பாக கேரளா அதன் தடுப்பு நடவடிக்கைகளில் மிக சிறப்பாக ஈடுபட்டு வருகிறது. எனினும் உலகின் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இந்தோனேசியாவும் தற்போது மீண்டும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது என்பது கவலைக்குரிய விசயமாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here