இந்தியாவில் மே மாதத்திற்குள் 24 கோடி பேரை கொரோனா தாக்கும் – எச்சரிக்கும் அமெரிக்க ஆய்வு நிறுவனம்..!

0

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வரும் மாதங்களில் இதன் தாக்கம் தீவிரமடையும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று வரும் மே மாதத்திற்குள் இந்தியாவில் 24 கோடி பேர்க்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று எச்சரித்து உள்ளது.

தாமதமாக ஊரடங்கு..!

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்து செயல்படும் CDDEP (The Centre For Disease Dynamics, Economics & Policy) எனும் நிறுவனம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியுள்ளது என தெரிவித்து உள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவும் தாமதமாக பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.

குறைந்தபட்சம் 15 கோடி பேர்..!

இந்தியாவில் மக்கள் தொகையான 130 கோடியில் குறைந்தபட்சம் 15 கோடி பேர்க்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்து உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு மற்றும் சமூக விலகலை முறையாக பின்பற்றாவிட்டால் 3 விதமான வேகத்தில் மே மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவும் என கூறப்பட்டு உள்ளது. அதன்படி,

  1. குறைந்த வேகத்தில் பரவினால் 12 கோடி பேர்க்கு தொற்று
  2. நடுத்தர வேகத்தில் பரவினால் 20 கோடி பேர்க்கு தொற்று
  3. அதிகபட்சமாக 24 கோடி பேர்க்கு தொற்று ஏற்பட வாய்ப்பு.

இந்தியாவில் 24 கோடி பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அனைவர்க்கும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதில் 25 லட்சம் பேரை மட்டுமே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவேண்டி இருக்கும் என தெரிவித்து உள்ளது அந்த ஆய்வு. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து தனிமைப்படுத்துவத்தின் மூலம் மட்டுமே பரவலைத் தடுக்க முடியும்.

எனினும் இந்த ஆய்வறிக்கை முற்றிலும் தவறானது என ஜான் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here