Saturday, May 15, 2021

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா – 1.32 லட்ச பேர் பாதிப்பு!!

Must Read

தமிழகத்தில் கொரோனா நோய் பரவளின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்று அதிவேகமாக மக்களிடையே பரவி வருகிறது. கடந்த ஆண்டு வீசிய முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் மாநில அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பல கட்டுப்பாடுகளை விதித்தும் கொரோனா மக்களை தாக்குவது தொடர்ந்து அதிகமான அளவில் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் பல கட்ட தடுப்பு நடவடிக்கைகளும் அமலில் இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

உலக நாடுகளுக்கு உதவிய இந்தியாவிற்கு இந்த நிலைமையா?? ஐநா வேதனை!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 17ம் தேதி வரை கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 9,80,728 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 27ம் தேதி வரையிலான 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,32,774 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதேபோல் கடந்த 10 நாட்களில் தொற்றினால் 657 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 65,365 ஆக இருந்த நிலையில் தற்போது கடந்த 10 நாட்களில் ஏற்பட்ட பாதிப்பினால் தற்போது 1,08,855 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி இல்லை – மாவட்ட ஆட்சியர் அதிரடி!!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு.அரவிந்த் மண்டபங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை என அறிவித்துள்ளளார். மேலும் அவர் அவ்வாறான நிகழ்ச்சிகளை வீடுகளில் நடத்தவும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -