கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா – அமெரிக்காவில் 1 லட்சம் பேர் பலி..!

0

கோவிட்-19 கொரோனா என்னும் நோயால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17.45 லட்சமாகவும் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக  அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்பு மையம் ஆனா ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நான்கு மாதங்களுக்குள் உயிரிழப்புகள் 1 லட்சமாக உள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்  அதிகரித்துள்ளது.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வயது வாரியான விவரத்தையும் தெரிவித்துள்ளது அமெரிக்கா.

ஒரு லட்சம் உயிர் சேதம்

சீனாவின் வூஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா நோய்  ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிக அளவு உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் மோசமாகப் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் 21-ஆம் தேதியில் கண்டறியப்பட்டது.அமெரிக்காவில் உயிரிழப்புகள் குறைவாகத்தான் இருக்கும் என்று தெரிவித்து, கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்ட அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வரை உயிரிழப்பார்கள் என்று தெரிவித்தார்.

அதன்பின் தன்னுடைய கணிப்பை மாற்றி 60 ஆயிரம் முதல் 70 வரை தான் உயிரிழப்புகள் இருக்கும். தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹைட்ராக்ஸி குளோராகுயின் மாத்திரைகள், வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.ஆனால், அதிபர் ட்ரம்ப்பின் கணிப்பை மீறி அமெரிக்காவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது.

அதிபர் டிரம்ப் மீது குற்றச்சாட்டு

ஊரடங்கு உத்தரவை மிகத் தாமதமாகப் பிறப்பித்ததே இந்தளவுக்கு பாதிப்புள்ளத்துக்கான காரணம் என்று பல்வேறு தரப்பினரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது குற்றம்சுமத்தி வருகின்றனர். இந்த குற்றசாட்டுகள் குறித்து கவலைப்படாமல், பிற நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவதிலும், வல்லுநர்களின் கருத்துக்களை ஏற்காமல் அவர்களை விமர்சிப்பதுமாக இருக்கும் டிரம்ப், அங்கு ஊரடங்கைத் தளர்த்தவும் முடிவு செய்திருக்கிறார். இதனால் அங்கு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகள் கவலை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here