‘கொரோனா பற்றிய மாற்று கருத்து’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை வெளுத்து வாங்கிய சசி தரூர்!!

0

இந்த தேசம் கொரோனா அலை பரவலின் பிடியில் சிக்கி மூச்சு விடத் திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் மீது சசிதரூர் கடும் தாக்கு:

கடந்த 7 நாட்களாக இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியதற்கு சசி தரூர் பதிலடி கொடுத்தார். அதாவது அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இந்த தேசம் கொரோனா பிடியில் சிக்கி மூச்சுவிடத் திணறும்போது, இந்தியர்கள் பாதிக்கப்படுவதைப் பார்த்து உலகம் வேதனைப்படும்போது, அவர் மாற்று யதார்த்தம் குறித்துப் பேசுகிறார்”.

இந்தியாவின் 3-வது கட்டத் தடுப்பூசி முன்பதிவு செய்துள்ளதற்கு வந்துள்ள குறுஞ்செய்தி குறித்தோ, போலி மருந்துகளை விளம்பரம் செய்தது குறித்தோ, உறுதி செய்யப்படாத சிகிச்சை குறித்தோ அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி கொண்டாடுவார் எனக் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நம்முடைய அரசு வெளியிடும் எந்த எண்ணிக்கையையும் யாரும் நம்பமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஹர்ஷவர்தன், 3-வது கட்டத் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யும் கோவின் தளம் குறித்துப் புகழ்ந்திருந்தார். அதில் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளார்கள், 1.45 கோடி எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “பட்ஜெட்டில் மத்திய அரசு தடுப்பூசிக்காக ஒதுக்கீடு செய்த ரூ.35 ஆயிரம் கோடியை ஏன் செலவிடவில்லை. இந்தப் பணத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்குத் தடுப்பூசி வாங்கலாமே. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபின் ஏன் பணத்தைச் செலவிடாமல் மத்திய அரசு அமர்ந்திருக்கிறது” என்றும் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here