இந்தியாவில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு – மருந்து நிறுவனங்களுடன் பிரதமர் ஆலோசனை!!

0

நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு தற்போது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தடுப்பூசி தட்டுப்பாடு:

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. நாட்டில் புதிய உச்சமாக கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே 2 லட்சத்தை தாண்டி வருகிறது. அதேபோல் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் முழு நேர ஊரடங்கும் பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மருத்துவர்கள் செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கவுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தற்போது தடுப்பூசிகள் தடுப்பாடாகியுள்ளது. கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமர் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்த நிலையில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து இன்று மாலை 6 மணி அளவில் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பது குறித்து மீண்டும் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசிக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here