இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி – முன்பதிவு தொடக்கம்!!

0

நாட்டில் கொரோனா தொற்றினை குறைப்பதற்காக வருகிற மே மாதம் 1ம் தேதி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தடுப்பூசி முன்பதிவு:

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையாக மக்கள் அனைவரையும் பாதித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் தங்களது உயிரை இழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு வாரமாக பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து 3 லட்சத்தை தாண்டி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றினை குறைப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசியினால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும் என்பதால் நாடு முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 29 முதல் மே 3ம் தேதி வரை பொதுமுடக்கம் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

இந்நிலையில் இந்தியாவில் வருகிற மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தற்போது அதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தனை முன்பதிவு செய்வதற்கு https://www.cowin.gov.in/home என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது முன்பதிவை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here