தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் – உலக சுகாதார நிறுவனம் கவலை!!

0
தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் கவலை!!
தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் கவலை!!

உலக அளவில் கொரோனா உற்பத்தியில் 80 விழுக்காடு அளவு உலகின் பணக்கார நாடுகளுக்கே செல்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

தற்போது உள்ள கொரோனா தொற்று நோய்க்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தடுப்பூசி ஒன்றே இந்த கொடிய தொற்றுக்கு தீர்வாக உள்ளது. எனவே தடுப்பூசிகளை பெற்று தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்துவதிலேயே அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவிலும் தற்போது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் கவலை!!
தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் – உலக சுகாதார நிறுவனம் கவலை!!

இந்நிலையில் தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளதாவது, உலகில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பூசியில் 80 விழுக்காடு பணக்கார நாடுகளுக்கே செல்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு நாடும் அதன் மக்கள் தொகையில் குறைந்தது 40 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி செல்லுதுவது பற்றி யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் - உலக சுகாதார நிறுவனம் கவலை!!
தடுப்பூசிகளை பெறுவதில் ஆதிக்கம் செலுத்தும் பணக்கார நாடுகள் – உலக சுகாதார நிறுவனம் கவலை!!

அதிலும் குறிப்பாக இஸ்ரேல், டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய உலக நாடுகள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டனர். தற்போது மூன்றாவது டோஸ் போடுவதற்கான திட்டங்களைத் ஆரம்பித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here