இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுமுறை நாளிலும் தடுப்பூசி செலுத்த உத்தரவு!!

0

இந்தியாவில் தற்போது கொரோனா வேகமெடுத்து வரும் நிலையில் விடுமுறை நாட்களில் கூட கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று நாடெங்கிலும் பரவி வந்தது. கடந்த ஆண்டு முழுக்க கொரோனாவுடன் போராடி வந்துள்ளோம். தொடர்ந்து பல சிக்கல்களையும் சந்தித்து இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளோம். நாடே தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 72 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona

இதற்கு முன்பு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக தான் இருக்கும். மருந்தே இல்லாத காலத்திலேயே கொரோனாவை சந்தித்து வந்த நமக்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடித்ததும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு காரணம் என்ன?? தேர்தல் பரப்புரை என்று ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடுகின்றனர். அரசியல் தலைவர்களே இப்படி செய்தால் நாட்டின் நிலை என்னாவது?? மேலும் மக்கள் மத்தியிலும் இதற்கான விழுப்புணர்வும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றனர்.

‘எங்க தலைவி களம் இறங்கிட்டாங்க’ – சைடு போஸில் கலக்கும் ரம்யா பாண்டியன்!!

தேர்தல் என்ற பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து இந்த கொரோனா வேகமெடுக்க தான் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது இனிமேல் விடுமுறை நாட்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைகள் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here