தடுப்பூசி செலுத்தி கொண்டர்வர்களுக்கு விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை… பீதியில் உறைந்திருக்கும் மக்கள்!!

0

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து விட்டதாக உலக நாடுகள் எண்ணிவிடக்கூடாது எனவும் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவத்தொடங்கி அது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் விட்டு வைக்கவில்லை என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா எனும் கொடிய நோய் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்வது இன்றியமையாததாகும். இதனை அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்களும் வலியுறுத்தி வருகின்றன. மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியா உட்பட பெரும்பாலான உலக நாடுகளில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளவதால் வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்த மக்களுக்கு தற்போது விஞ்ஞானிகள் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

அந்த எச்சரிக்கை என்னவென்றால் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களையும் விட்டு வைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் டெல்டா வைரஸ் காரணமாக மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி போட வேண்டுமா என்பது குறித்து WHO ஆய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here