தமிழக மக்களுக்கு ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி – தயாரிப்பு பணிகள் தீவிரம்!!

0

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனாவிற்கான தடுப்பூசி போட தமிழக சுகாதாரத்துறை தீவிர பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை பதப்படுத்தவும், சேமித்து வைப்பதற்காகவும் 2.50 கோடி மதிப்பில் மையங்கள் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற பெரும் தொற்று உலகம் முழுவதும் பரவி தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், கொரோனவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona vaccine
corona vaccine

தடுப்பூசி விநியோகம் குறித்து கண்காணிக்க தமிழகத்தில் கடத்த வாரம் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தங்களது முதல் கட்ட ஆய்வினை நேற்று தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் குழு இயக்குனர் தலைமையில் நடத்தியது. முதலில், 5 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அவர்களது விவரம் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கு பின்பாக, தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.16 முதல் ஆன்லைனில் அரியர் தேர்வுகள்!!

இந்த பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் 2.50 கோடி மதிப்பில் 2,800 மையங்கள் துவக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் பதப்படுத்தி சேமித்தது வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, இந்த மையங்களில் 2 கோடி பேருக்கான தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வரும் ஜனவரி மாதத்திற்குள் தடுப்பூசிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here