கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் – 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு திட்டம்!!

0

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்ததும் எப்படி அதனை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு ஆந்திரா, அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் முன்னோட்டம் நடத்த உள்ளது. இந்த முன்னோட்டத்தில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி தயாரிப்பில் 3ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிடைத்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீவிரமான பணிகளும் ஒரு பக்கம் நடைபெற்று வருகின்றது. யாருக்கு முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி வந்ததும், குழப்பங்கள் ஏற்படாத வண்ணம் இருக்க முன்னோட்டம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்து வருகின்றது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கும் இதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த முன்னோட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் தடுப்பூசிகள் போடப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது,

முன்னோட்ட நடவடிக்கைகள்:

காரணம், தடுப்பூசிகளுக்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. அதே போல் இந்த முன்னோட்டம் ஆந்திர பிரதேசம், அசாம், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் தடுப்பூசிகள் எப்படி பதப்படுத்துவது, அதனை எவ்வாறு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது, தடுப்பூசிகளை சம்பத்தப்பட்ட மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும், சுகாதார மையங்களுக்கும் கொண்டு செல்வது.

நடிகர் ரஜினிகாந்திற்கு திடீர் உடல்நலக்குறைவு – அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!

corona vaccine
corona vaccine

இதற்கு பிறகு, எந்த தேதியில், எந்த நேரத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தடுப்பூசிகள் வழங்குவதை முன்கூட்டியே தெரிவித்தல், தடுப்பூசி வழங்கும் போது மக்கள் எவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும் போன்றவை செய்து பார்க்கப்பட உள்ளன.

இந்த முன்னோட்ட நடவடிக்கைகளில் எந்தவித குழப்பமும் நடைபெறக் கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முன்னுரிமை அடிப்படையிலான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகின்றது. கொரோனாவிற்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்ததும், தயாரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here