கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்லவில்லை – சுகாதாரத்துறை செயலர் பேட்டி!!

0

நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று ஒருபோதும் மத்திய அரசு கூறவில்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் பேட்டிளித்துள்ளார். குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு தான் முதலில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டடுள்ளார்.

கொரோனா நோய் பரவல்:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து அனைத்து நாடுகளுக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. இந்த நோய் பரவலுக்கு இன்னும் முறையான மருந்துகளோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகளிலும் அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் மட்டும் மூன்று இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய சுகராதரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் சில விஷயங்களை தெளிவுபடுத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் கூறியதாவது, “மத்திய அரசு ஒரு போதும் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கினால் போதுமானது. குறிப்பிட்ட சிலருக்கு தடுப்பூசி போடப்படுவதன் மூலம் தொற்று பரவல் சங்கிலி உடைக்கப்படும். இதனால் பரவல் சதவீதம் குறைந்து விடும். மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தேவையில்லாததாக போய் விடும்”

தமிழகத்தில் 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது??

“முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்களுக்கு தான் தடுப்பூசி முதலில் வழங்கப்படும். கொரோனா பரவல் தொற்று சங்கிலியினை உடைக்க வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படவில்லை” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here