Friday, March 29, 2024

ஒரு நாளைக்கு 7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி உற்பத்தி – இந்திய நிறுவனம் தகவல்!!

Must Read

தினமும் 7 கோடிக்கும் அதிகமான மற்றும் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய தடுப்பூசிகளை தயாரிக்க முழுவீச்சில் இறங்கி உள்ளது, இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் நிறுவனம்.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற இந்த வைரஸ் பல நாடுகளுக்கு அடுத்து அடுத்து வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. இதன் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி மட்டும் உலகில் உள்ள 1 கோடிக்கும் அதிகமானோர் தொற்றில் பாதிக்க பட்டு உள்ளனர். 6 இதில் லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.

corona vaccine
corona vaccine

இதன் தாக்கம் மக்களை அதிகமாக பாதித்து உள்ளது. இதற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், தடுப்பூசி கண்டுபிடிக்க அஸ்போர்ட நிறுவனம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா போன்ற நிறுவனங்கள் தீவிரமாக இறங்கி வந்தது. அவர்கள் தற்போது ஒரு தடுப்பூசியை கண்டு பிடித்து உள்ளனர், அதனை மனிதர்களுக்கு அளித்து பரிசோதனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

‘கோவிஷீல்டு’:

இந்த தடுப்பூசியை இந்தியாவில் 1000 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையை செய்ய அரசு முடிவு செய்து உள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மேலும், தடுப்பூசி பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையமும் விரைவான ஒப்புதல்களை அளித்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு ‘கோவிஷீல்டு’ என்று இந்தியாவில் பெயரிட்டு உள்ளனர்.

வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்த டீக்கடைக்காரர், முதல்ல வாங்குன 50 கோடியை கட்டுங்க – அதிர்ச்சியளித்த வங்கி நிர்வாகம் !!

Coronavirus vaccine says Adar punvala
Coronavirus vaccine says Adar punvala

தலைமை அதிகாரி கூறியதாவது..

இது குறித்து இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறியதாவது,” மஹாராஷ்டிராவில் தான் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. பாதிப்பு எணிக்கையை கணக்கு செய்து பார்த்தால் கிட்டத்தட்ட மகாராஷ்டிரா மக்கள் தொகையில் பத்தி பேர் இருப்பதாக அதிர்ச்சி தகவலாக உள்ளது. அதனால், சீக்கிரமாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சி செய்ய உள்ளோம். பரிசோதனைக்கு மும்பை மற்றும் புனே போன்ற நகரங்களை சோதனை தளங்களாக முடிவு செய்ய உள்ளோம்.

Serum Institute
Serum Institute

மேலும், நாங்கள் அவசரபட விரும்பவில்லை . மக்களுக்கு பயன் அளிக்கும் விதமான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் மனிதர்களுக்கான மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த இலக்கை நிர்ணயித்து உள்ளோம். இந்த சோதனைகள் வெற்றி அடைந்தால், நாங்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரை தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். ஆரம்பகட்டத்தில் தடுப்பூசிகளை தயாரிக்க எங்கள் நிறுவனம் 7 கோடி வரை தயாரிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2000 ரூபாய் நோட்டு விவகாரம்.., இனி மாற்ற முடியாதா?? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -