ஜப்பானில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி – நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!!

0

ஜப்பான் நாடாளுமன்றம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் மசோதாவை இன்று சட்டமாக நிறைவேற்றி உள்ளது. மேலும் ஜப்பான் அரசு தடுப்பூசிகளை வழங்குவதற்கு சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஜப்பான் பிரதமர் உறுதி:

ஜப்பானின் கீழ் சபையிலும், நாடாளுமன்றத்தின் மேல் சபையிலும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் சட்டம் இன்று நிறைவேறியது. மேலும் இந்த கொரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என்றும் ஜப்பான் பிரதமர் யோசிஹைட் சுகா மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்தகைய கொரோனா பரவலை வெகு விரைவில் அழிப்பதற்காகவே இந்த புதிய சட்டத்தை ஜப்பான் அரசு இன்று வழங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசிலிருந்து ஏதேனும் சுகாதார பிரச்சனையினால் ஏற்படும் இழப்பிற்காக தனியார் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது இந்த மசோதா.

நிறுவனத்தில் ஒப்பந்தம்:

கடந்த மார்ச் மாதத்திலிருந்தே கொரோனா பரவல் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் மக்கள் இறந்தனர். இதுவரை ஜப்பானில் 2000க்கு மேற்பட்டோர் இந்த கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நிறுவனங்களான அஸ்ட்ராஜெனெகா, பி.எல்.சி மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனத்திலும், மாடர்னா இன்க் நிறுவனத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்ததுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here