குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி: இந்த மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு வரும்!!!

0

வருகிற அக்டோபர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் அலை ஏற்பட்டபின்னரே உலக நாடுகள் அனைத்தும்  தடுப்பூசி தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியது. ஏனெனில் அதற்கு முன்பு கொரோனா நோய் தொற்று என்பது பலரும் கேள்விப்படாத ஒன்றாகவே இருந்தது. முதல் அலை முடிந்த பின்னர் சில மாதங்கள் கழித்து இரண்டாம் அலை பரவ தொடங்கியது.

 

ஆனால் இரண்டாம் அலையில் உலக நாடுகளின் கைவசம் தடுப்பூசி எனும் ஆயுதம் இருந்தது. இதனால் இரண்டாம் அலை ஏற்பட்ட போதும், அதில் இருந்து தற்போது உலக நாடுகள் வேகமாக மீண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா நோய்யும் அதனை உருமாற்றி கொண்டே வருகிறது. எனவே கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

மேலும் மருத்துவர்கள், இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தெரிவித்துள்ளனர். எனவே குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரந்திப் குலேரியா, குழந்தைகளுக்கு செலுத்த கூடிய கோவாக்சின் தடுப்பூசி அக்டோபருக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here