கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சூர்யா …! – புகைப்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு !!!

0
பூஜா ஹெக்டே-வை ஓரங்கட்டி கவர்ச்சி நாயகியை புக் செய்த சிறுத்தை சிவா - சூர்யா 42 அப்டேட்!

கொரோனா என்னும் கொல்லுயிரி நாடு எங்கும் தன் அலையை வீசி மனிதர்களை நிலைகுலைய வைத்து உள்ளது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்த பேராயுதகமாக விளங்குவது தடுப்பூசிகள் மட்டுமே. இதனை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா துறையினர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் நடிகர் சூர்யாவும் தடுப்பூசி போட்டுகொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா அவர்கள். சினிமா பின்னணியை சார்ந்த குடும்பமாக இருந்தாலும் தன் திறமையால் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின்  மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். மேலும் நந்தா என்ற படத்தில் இவரின் மிக வித்தியாசமான கதாபாத்திரம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதை தொடர்ந்து பல்வேறு வித வித கெட் அப்களில் நடித்து தனது திறமையை உலகிற்கு அறிமுகம் செய்தார். இன்று வரை அவரின் படங்கள் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனையையும் படைத்து  வருகின்றன. மேலும் கல்வி சார்ந்த சமூக நலன்களிலும் அக்கறை கொண்டவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. இதன் மூலம் பல்வேறு கல்வி உதவிகளையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் கொரோனா என்னும் வைரஸை கட்டுப்படுத்த அரசு போராடி வரும் நிலையில், மக்களிடையே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு அந்த புகைப்படத்தை நடிகர் சூர்யா வெளியிட்டு உள்ளார். மேலும் இவரை போன்று நடிகர் கார்த்தி , யோகி பாபு ,நடிகை ஜனனி உட்பட பலரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here