தடுப்பூசி செலுத்தி கொண்டால் 100 டாலர் பரிசு – நியூயார்க் மேயர் அசத்தல் அறிவிப்பு!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை நியூயார்க் மேயர் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சறுத்தி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. எனவே பல நாடுகள் மக்களை தடுப்புசி செலுத்த ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாம் அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் பரவல் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி...

ஏற்கனவே அந்நாட்டில் தற்போது அதிகரித்து வரும் தொற்று பாதிப்பால் அதிபர் ஜோ பைடன் மக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசம் அணியும் படி வேண்டுகோள் விடுத்தார். அதனோடு தடுப்பூசிகள் இயக்கத்தை துரிதப்படுத்தவும் அமெரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் நியுயார்க் மாகாண மேயர் மக்களுக்கு ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். அதாவது நியூயார்க்கில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டாலர் பரிசு கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு நியுயார்க் நகரை சேர்ந்த மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here