வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மாநிலங்கள் – பட்டியல் வெளியீடு!

0

நாட்டில் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள்  பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு:

நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிரான உள்நாட்டு தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு போன்றவை அந்த நோய்க்கு எதிரான ஆயுதமாக சுகாதாரத்துறையினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  நாடு முழுவதும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டு கொண்டோரில் பெரும்பாலும் இந்த வைரசால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாம் அலை வருவதற்குள் நாட்டில் பாதி பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடித்திருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. இந்த நிலையில், வயதானவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் பாதி சதவீத பெரியவர்களுக்கு கூட இன்னும், குறைந்த பட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

 

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் உள்ள மூன்று மாநிலங்களில் வைரசுக்கு எதிராக தடுப்பூசி  செலுத்தி கொண்டவர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தில் ஆயிரம் பேரில், 521 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவே உத்திர பிரதேச மாநிலத்தில் 653 ஆகவும், மேற்கு வங்கத்தில் 853 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதனில் முன்னேற்றம் காணும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆயிரம் முதியவர்களில் சராசரியாக 971 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அம்மாநில அரசு சாதனை செய்திருக்கிறது.  கடந்த மாத கணக்குப்படி, நாட்டில்  60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 63% பேர் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 37% இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டதாக புள்ளிவிவரத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here