தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடி படம் நீக்கம்..வெடிக்கும் மத்திய மாநில அரசு மோதல்!!!

0

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்படுவது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெறுகிறது. மத்திய அரசு கொள்முதல் செய்து கொடுத்த தடுப்பூசிகளையே மாநில அரசுகள் முதலில், மக்களுக்குச் செலுத்தி வந்தன. அதனால் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது.

பின்னர் இந்தியாவில் சில மாநிலங்களில் 8 – 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாநில அரசின் செலவில் தடுப்பூசிகள் போடப்படுவதால் பிரதமரின் படத்தை படத்தை எதற்காக போட வேண்டும் என மாநில அரசுகள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் விநியோகிக்கப்பட்டு வருவது பரபரப்பை உருவாகியுள்ளது.

மேலும் அந்த தடுப்பூசி சான்றிதழில் “விழிப்போடு இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்” என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது. இது தற்போது இந்த தடுப்பூசி சான்றிதழிலும் வெளிப்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here