Thursday, April 25, 2024

நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் மரணம் – அமெரிக்காவில் கோரத்தாண்டவம்!!

Must Read

அமெரிக்காவில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார் என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களாக கொரோனா பதிப்பில் அமெரிக்கா தான் முதல் இடத்தில இருந்து வந்தது. அதிலும் முக்கியமாக, கலிபோர்னியா, டெஸ்சஸ் பிளோரிடா மற்றும் கரோலினா போன்ற மாகாணங்களில் தான் அதிகமாக பாதிப்பு இருந்து வந்தது என்று, நியூயார்க் வெளியிட்ட பட்டியல் கூறுகிறது.

கலிபோர்னியாவில் மட்டும் ஒரு நாளில் 172 பேர் கொரோனவால் இறந்துள்ளனர். ஆனால், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 192 பேர் இறந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் பாதிப்பு எண்ணிக்கை 12,000 கும் அதிகமாக இருந்துள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இது மற்ற நாட்களை விட பல மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளோரிடாவிலும் அதே போல் 216 பேர் உயிரிழந்துள்ளனர் . டெக்சாஸ் மாகாணத்திலும் அதே போல் கடந்த புதன் கிழமை 316 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிப்பு குறைந்துள்ளது:

ஆனால், பாதிப்பு எண்ணிக்கை குறைந்து தான் உள்ளது என்று கூறப்படுகிறது. மற்ற மாகாணங்களை பார்க்கையில், டெக்சாஸ் சீரான நிலையில் தான் உள்ளது.

இது குறித்து அலர்ஜி மற்றும் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி கூறுகையில் ” மாக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த புதன் கிழமை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது, ஒரு நிமிடத்திற்கு ஒருவர் என 1,420 பேர் இறந்துள்ளார். இது மிகவும் கவலை அளிக்கும் ஒன்று தான். நங்கள் அனைவரையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறோம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை விவரங்கள் Whatsapp-ல் தான்? தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவிப்பு!!!

இன்றைய கால கட்டத்தில் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாட்ஸ்அப் மூலம் ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக நேரம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -