Wednesday, March 27, 2024

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்தது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்..!!

Must Read

கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா பரவல் தற்போது 42% ஆக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 26% ஆக குறைந்து உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறி உள்ளார்.

கொரோனா வீரியம்:

கடந்த சில மாதங்களுக்கு முன் பல நாடுகளுக்கு கொரோனா என்ற வைரஸ் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக தமிழகத்தில், கடந்த மாதம் சென்னையில் ஒரு நாளைக்கு 1000 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது.

corona cases decreases
corona cases decreases

அதன் பலனாக, தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் மனதில் பால் வார்க்கும் விதமாக பேட்டி ஒன்றை அளித்து உள்ளார்.

குறைந்த பாதிப்பு:

அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் 42 % ஆக கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை இருந்து வந்தது. ஆனால், தற்போது அது 26 % ஆக குறைந்து உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு பல மடங்காக குறைந்து உள்ளது தெரிகிறது.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 297 பேர் கொரோனா தொற்றில் இருந்து நலமாக வீடு திரும்பி உள்ளனர். நோயாளிகளுக்கு சிறப்பாக தமிழக அரசு வசதிகளை செய்து வருகிறது.

சிறந்த நடவடிக்கைகள்:

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 750 பேருக்கு படுக்கைவசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் 200 படைக்கைவசதிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களில் 1515 பேர் நலம் அடைந்து உள்ளனர்.

‘கோலியைக் கிண்டலடித்த ஹர்பஜன் சிங்’

health minister vijayabasker
health minister vijayabasker

மேலும் அவர் கூறுகையில் “மக்கள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். எந்த அறிகுறிகள் தெரிந்தாலும் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போது தான் உரிய சிகிச்சை அளிக்க முடியும். இனி வரும் களங்களில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்க படும்” என்று தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப்படி & HRA உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -