தொடர்ந்து ஆட்டம் காட்டும் கொரோனா: உலக அளவில் 41 லட்சத்தை தாண்டிய உயிரிழப்பு!!

0
மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா - ஒரே நாளில் கட்டுக்கடங்காமல் அதிகரித்த நோய் பரவல்!

தற்போது வரை உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.11 கோடியை தாண்டியுள்ளது. மேலும் இக்கொடிய தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41.05 லட்சம் ஆக பதிவாகியுள்ளது.

உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஆல்பா, டெல்டா என உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் ஆக மாறியுள்ளது. மேலும் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு காரணம் உருமாறிய டெல்டா வைரஸ் என நிபுணர்கள் கணித்து இருந்தனர். தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில உலக நாடுகள் தங்களது நாட்டில் மூன்றாம் அலை ஆரம்பித்து விட்டதாக அறிவித்தனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவலின்படி இந்தியாவில் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா இந்தியாவை தாக்கும் என எச்சரித்தனர். மத்திய அரசும் கொரோனா மூன்றாம் அலை கணிப்பை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்திய தகவலின்படி உலகம் முழுக்க கொரோனா தொற்றால் 191,198,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4,105,540 ஆக பதிவாகியுள்ளது. 174,151,160 பேர் இந்நோய் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here